ஜாதக யோகங்கள்

ஜாதக யோகங்கள்
10ம் அதிபதி நவாம்சத்தில் மேஷம்,விருட்சிகம் என செவ்வாயின் வீட்டில் இருந்தால் - நெருப்பு சார்ந்த தொழில் அமையும்.  தங்கம், வெள்ளி உருக்கும் கடை, ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில்,செங்கல் சூளை, டீ, ஹோட்டல், பேக்கரி, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகிய தொழில்கள் இதன் மூலம் அமையும். பத்தாம் அதிபதி நவாம்சத்தில் ரிஷபம் துலாம் என சுக்ரன் வீட்டில் இருந்தால் - பெண்களின் அணிகலன்கள், ஆடைகள், உள்ளாடைகள், பேன்ஸி ஸ்டோர், , பெரிய ஷோரூம், சீரியல் படம் தயாரித்தல், சூப்பர் மார்க்கெட்,வெள்ளி வியாபாரம், ஏஜென்ஸி  ஆகிய தொழிலகள் அமையும்.

10ம் அதிபதி நவாம்சத்தில் மிதுனம் கன்னி என்று புதன்னுக்குரிய ராசிகளில் இருந்தால்-   பல தொழில செய்யும் யோகம் உண்டு. ஏஜென்ஸி, மார்க்கெட்டிங், கமிஷன், காண்ட்ராக்ட், , பல்பொருள் அங்காடி, நாட்டு மருந்து கடை, புத்தகம், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், பதிப்பகம், பிரிண்டிங் ஆகிய தொழிலகள் அமையும் யோகம் கிடைக்கும்.  10 ம் அதிபதி நவாம்சத்தில் சந்திரன் வீட்டில் இருந்தால் தண்ணீர் சம்பந்தமான தொழில், பழமண்டி, பழக்கடை காய், கனி, பூ வியாபாரம், பாஸ்ட்ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள்,அப்பளம் , ஜாம், ஊறுகாய், கெமிக்கல் ஆகிய தொழிலக்ள அமையும். 10ம் அதிபதி நவாம்சத்தில் சிம்ம ராசியில் இருந்தால் ஹோட்டல், பேக்கரி, நகைக்கடை, ஜவுளிக்கடை, அரசாங்க காண்ட்ராக்ட், கேண்டீன், மருத்துவ தொழில், நெருப்பு ஆகிய தொழிகள் செய்யும் யோகம் அமையும். 10ம் அதிபதி நவாம்சத்தில் தனுசு , மீனம் ஆகிய குருவின் வீட்டில் இருக்குமேயானால்  தங்கவியாபாரம், நவரத்தினவியாபாரம், துணிக்கடை, மளிகைக்கடை, ரெடிமேட்கடை, ஹோட்டல் தொழில் என யோகம் அமையும். 10ம் அதிபதி நவாம்சத்தில் சனியின் வீடாகிய மகரம், கும்பம் ஆகிய வீடகளில் இருந்தால் எண்ணெய் தொழில், இரும்பு, கட்டுமான தொழில் ஹார்ட்வேர் மற்றும் பழைய-புதிய வாகன விற்பனைத் தொழில், ஸ்கிராப், அச்சகம், பத்திரிகை மற்றும் புத்தகம் வெளியிடுதல் ஆகிய தொழில யோகம் வாய்க்கும்.



கூட்டாளி இல்லாமல் தொழில் செய்யும் யோகம் யாருக்கு உண்டு?

ஜாதகத்தின் அடிப்படையில் தொழில் அமையும் யோகம் எப்படி?


கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?