வியாபாரம், தொழில் - யோகம் யாருக்கு?

தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி -  ஜோதிடம், கிரகங்களால் அமையும் தொழில் முறைகள் :-

வேலையா தொழிலா எது உங்களுக்கு வெற்றியை தரும்? உங்களுக்கு எந்த தொழில் வெற்றி, புகழ், பணம் தரும்?  செய்துவரும் தொழில் அல்லது வியாபாரத்தில் தடை அகன்று யோகம் பெற வழியுண்டா? உங்கள் குழந்தைக்கு டாக்டர் ஆக யோகம் உண்டா?  மனைவி வழியில் கூட்டுத் தொழில் மூலம் யோகம் உண்டா? கூட்டாளி இல்லாமல் தொழில் செய்யும் யோகம் யாருக்கு உண்டு?  ஜாதகத்தின் அடிப்படையில் தொழில் அமையும் யோகம் எப்படி? தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம் எப்படி இருக்கிறது? ஜாதகப்படி தொழில் , வேலை தேர்ந்தெடுப்பது எப்படி ?  ஜாதகப்படி தொழில் என்னவாக அமையும்? எந்த தொழில் வெற்றியும் லாபத்தையும் தரும்? இப்படிப் பட்டவைகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஜோதிடத்தில் ஜவன ஸ்தானத்தை ஆராய வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தில் அந்த ஜீவன ஸதானதம்தான் ஜாதகத்தில் 10வது கட்டம். சோதிட சாஸ்திரப்படி தொழில் யோகம் / வியாபாரம் யோகம் காட்டும் பூதக் கண்ணாடி எது அப்படின்னு பார்தீர்கள் என்றால் ஜாதகத்தில் 10வது கட்டம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா அதுதான் தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடியாகும் / வியாபாராம் யோகம் காட்டும் பூதக்கண்ணாடியாகும். நாம் எந்த தொழில் செய்தால் வெற்றியடைய முடியும் / எந்த வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்று அறிந்து கொள்ள வேண்டுமானால் கண்டிப்பாக இந்த பத்தாம் இடத்தைதான் ஆராய வேண்டும். ஜாதக ரீதியாக சுயதொழில் செய்யலாமா அல்லது ஜாதக ரிதியாக வேலைக்கு போகலாமா என்று தெரிந்து கொள்ள ( சுய தொழில் துவங்குமுன் ) ஜாதகத்தில் வீடுகள் பற்றி அறிவது அவசியமாகும். ஒவ்வொரு கிரகங்கள் குறிக்கும் தொழில் பற்றி கீழே விளக்கமாக தந்திருக்கிறோம்.
லக்னமும் தொழில் அமைப்பும்
பத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள்
 "கால நேரம் வரும்போது எல்லாம் கூடிவரும்" என்பது பழமொழி! கால நேரம் எதுக்கு வருதோ இல்லையோ ஆனா இந்த தொழில் ஸ்தானம்மாகிய 10மிட ...  ஜீவன ஸ்தானத்துக்கு நல்ல காலம் வந்தாதான் தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். அப்பத்தான் நாம் நல்ல காலம் வந்தாச்சுன்னு நிம்மதியா இருக்க முடியும்.   சில பேருக்கு 10மிட கிரகமும் 9மிட கிரகமும் கெட்டு போய் இருந்துச்சுன்னா அவங்க காலம் பூரா கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருக்கனுமொயொழிய. நீங்களும் அம்பானி ஆகலாம் என்று நினைக்க கூடாது. அவரவர் பூர்வபுண்ணிய யோகம் படிதான் இந்த வியாபார யோகம் தொழில் யோகம் அமைகிறது. சிலருக்கு வியாபார யோகம், தொழில் யோகம் சிறு முயற்சியிலேமய சிறப்பாக அமைந்து விடுகிறது. சிலருக்கு கஷ்டங்கள், நஷ்டங்கள் சந்தித்தபின்பு அப்புறம் பெரிய அளவில் தொழில் லாபமாக வளர்ச்சி பெறுகிறது. இப்படியே வளர வளர மிகப்பெரிய செல்வந்தர் ஆகிற யோகம் சிலருக்கு வாய்த்துபிடுகிறது. ஒரு சிலர் குடும்பத் தொழில் சிறப்பாக செய்து செல்வந்தர் ஆகிற யோகம் வாய்ப்பதும் உண்டு.  ஒரு சிலருக்கு தகப்பனார் செய்த தொழிலையை தன் தொழிலாக செய்யும் யோகம் அமைவதும் உண்டு. இன்னுமு ஓருசிலருக்கோ மனைவி வந்தவுடன் தொட்டதெல்லாம் துலங்குவதும் உண்டு. சில பாக்கியவான்கள் மட்டுமே பிறக்கும்போதே “கோடீஸ்வர யோகம்” த்தோடு செல்வ சீமான்களின் வீட்டில் பிள்ளைகளாக பிறக்கிறார்கள். இதனால் அவர்கள் மேலும் மேலும் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முடிகிறது. இன்னும் சிலருக்கு நீச பங்க ராஜ யோகம் / நீச்ச பங்க ராஜ யோகம், விபரீத ராஜ யோகம், தசம தனலட்சுமி யோகம், பஞ்சமகா புருஷ யோகம், தர்மகர்மாதிபதி யோகம் போன்ற யோகங்கள் அமையப் பெற்று அந்த யோகம் பலன் தரும்போது பண்ம் கொட்டோ கொட்டுனு கொட்ட ஆரம்பித்துவிடுகிறது. இப்படிப்பட்ட நல்ல யோகம் பலன் தரும்போதுதான் வியாபாரமும் தொழிலும் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆக நல்ல யோகம் இருந்தால் மட்டுமே வியாபாரம் தொழில செழிக்க முடியும், வீட்டில் செல்வவளம் உண்டாக முடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

லக்னத்துக்கு பத்தாம் இடமே இந்த வியாரத்திற்குரிய பலனை தெரிந்து கொள்ளும் இடமாகும். இந்த இடத்தில் இருக்கும் கிரகங்களும் இந்த வீட்டை பார்க்கும் கிரகங்களும்  இந்த விட்டின் அதிபதிக்க இருக்கிற நல்ல கிரகங்களின் சம்பந்தம் ஆகியன இந்த வீட்டின் நன்மை தீமைகளை சுட்டிக்காட்டும்.

வியாபாரத்தில் கொடிகட்டி பறக்க வேண்டுமானால் இந்த இடம் பலம் பெறுவதோடு வித்தைக்குரியோனாகிய புதன் கிரகமம் சிறப்பாக இருக்க வேண்டும். புதன் தான் பொறுமை, சாதுரியம் / விவேகம் / சாமார்த்தியம் / சாணக்கியத்தனம் போன்ற யோகங்களை தருவதில் வல்லவர். வியாபாரம் லாபமாக நடந்திட , வியாபாரத்தில்  கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க இந்த புதனும் நன்றாக அமைவது முக்கியமாகும். இதைத்தவிர பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானம்மும் பலம் பெற்ற இருக்க வேண்டும் . அப்படி இருந்தால்தான் தொழில் வித்தகர், தொழில் மேதை, தொழில் அதிபர் என்று பெயரும் புகழும் பெறுவதோடு , தொழிலில் கொடிகட்டிப் பறக்க முடியும். செய்யும் தொழிலில் பேரும் புகழும் பெற வேண்டுமானால், செய்யும் வியாபாரத்தில் பெயரும் புகழும் பெற வேண்டுமானால் இந்த விஷயமெல்லாம் நன்றாக அமைந்திருக்க வேண்டும்.

சுகம் ஜீவனம் அதிபதிகள் இருக்கும் பலன்

பத்தில் ஒரு கிரகமாவது இருந்தால்தான் நல்லது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படி 10ல் இல்லா விட்டாலும் 4ம் விட்டில் இருந்தால் அவை கண்டிப்பாக 10ம் வீட்டை பார்க்கும். இந்த மாதிரி இருந்தாலும் நலலதுதான். இதனாலும் தொழில் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும், வியாபாரம் வளர்ச்சி பெற ஆரம்பிக்கும். 10ல் கேது இருந்தால் பல தொழில் யோகம் அமையும்.  பல தொழில் வளர்ச்சியடையும். பல வியாபாரம் வளர்ச்சியடையும். பத்தில் ராகு சூரியன் இருந்தால் வியாபார விருத்தி பெற  , தொழில் விருத்தி பெற யோகம் அமைகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்சியடையனும் என்றால் 10ம் அதிபதி நீசமடையாமல் இருப்பதோடு அவை 6,8,12லும் போய் உட்காராமல் இருப்பதோடு நீச கிரகத்தின் சேர்க்கையும் இல்லாமல் இருக்க வேண்டும்.

தொழிலில் கொடிகட்டி பறக்கும் நேரம்

நாம் வேலை பார்த்தா காசு பார்க்க முடியும் கிடைக்கும். ஆனா அதுகூட அதிர்ஷ்டமும் சேர்ந்துச்சுன்னா லாபத்துக்கு மேல் லாபம்தான். “ காசு , பணம் , துட்டு, மணி மணி”  “காசு பணம் துட்டு மணி மணி” தான். அப்படி ஒரு யோகம் உண்டுன்ன அதுதான் தர்ம கர்மாதிபதி ராஜ யோகம் / தர்மகர்மாதிபதி யோகம் / தர்ம கர்மாதிபதி யோகம் அப்படின்னு பெயர்.  இந்த யோகம் இருந்தால் நிறைய நிறைய  காசு சம்பாதிக்க முடியம். ஒருவருடைய ஜாதகத்தில் 9மிடம் பத்தாமிடம் இந்த இரண்டு கட்டத்தின் அதிபதிகளும் சேரந்து இருந்தால் ஒருவரை ஒருவார் பார்த்து இருந்தால் அதுதான் தர்மகர்மாதிபதி யோகம் னு சொல்வர்.  யோக நேரம் அப்படின்னு பார்த்தால் லக்னாதிபதி, 2,4,5,9,10,11 மிட அதிபதிகிளன் திசை, புத்தி, அந்தாரம் நடக்கும் நேரம் எல்லாம் யோக நேரம்தான். ஆனா இதிலே முக்கியமா கவனிக்க வேண்டிய விசயம் என்ன வென்றால் இந்த இடத்தின் அதிபதி எல்லாம் நீசமாகவே மறைந்தோ இருக்கக்கூடாது. அப்படி இருந்துச்சுன்னா அது யோக நேரம் இல்லை.  இவைகள் அனைத்தும் பலமா இருந்துச்சுன்னா ராஜயோக பலன்கள் கிடைக்க ஆரம்பிச்சுடும். ராஜ யோக பலன்கள் கிடைத்துவிட்டாலே காசு சம்பாதிக்கும் யோகம் பலன் தர ஆரம்பிச்சுடும்

ஒருத்தரின் ஜீவன அமைப்பு பற்றி ஜோதிட ரீதியாக ஆராயும் போது பத்தாம் வீடு, பத்தாம் வீட்டின் அதிபதி, 10ம் வீட்டில் இருக்கும் கிரகங்கள், 10ம் வீட்டின் அதிபதியோடு சேர்ந்த கிரகங்கள், பத்தாம் வீட்டின் அதிபதியை பார்க்கும் கிரகங்கள், 10ம்வீட்டின் அதிபதி நவாம்சத்தில் இருக்கம் இடங்கள் என பல விசயங்களும் தீர்மானிக்கின்றன.

சூரியன் லக்னத்திற்கு பத்தில் இருந்தால்
பத்தாம் வீட்டில் சூரியன் பலமாக இருந்தால் பல சாதனை படைக்கும் அமைப்பு , அதிகம் சம்பாதிக்கூடிய யோகம் அமையப்பெறும். அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் கௌவமான பதவி பெறம் யோகம், பாங் வேலை, வருமான வரி துறையில் வேலை, நீதித்துறைகளில் வேலை, என இவற்றில் உயர் பதவிகளை பெறும் யோகம் அமையும். நல்ல நிர்வாக திறனம் அமையப்பெறும். முக்கியமாக மூளை சூப்பரா வேலை செய்யும். சூரியனுடன் ராகு கேது சனி கிரகங்கள் சம்பந்தம் பெறுவது வேலைக்காரர்களால் சிக்கல் மறைமுக எதிர்ப்புகள், தேவையற்ற தடை தாமதம் இன்னல்கள், சட்ட பிரச்சனைகள் மற்றம் சிக்கல்கள் போன்றவைகளை சந்திக்க நேரிடும்.

சந்திரன் லக்னத்திற்கு பத்தில் இருக்குமானால்
 நீர் சாந்த, பயனம் சார்ந்த கடல் சார்ந்த துறைகளில் வருமானம் பெறும் நிலை, ஹோட்டல் தொழில் , பால் பண்ணை தொழில் ஏற்றுமதி இறக்குமதி தொழில், பட்டு ஆடைகள் மற்றம் முத்து , அழகு ஆபரணங்கள் , உப்பு சார்ந்த தொழில்கள், மலை சார்ந்த தொழில்கள் பால் சாக்லேட் சார்ந்த தொழில்கள் அடிக்கடி பயணம் செய்யக்4டிய தொழில்கள் ஆகியவற்றில் மூலம் நிறைய லாபம் சம்பாதிக்கக்கூடிய வகையில் யோகம் அமையும். சந்திரன் கெட்டு போய் இருந்தால் தேவையற்ற மனகுழப்பம், பீதி, டென்சன், எரிச்சல், தவறான எண்ணம், கெட்ட சிந்தனை, சரியான முடிவு எடுக்க திணறல் எடுத்த காரியத்தில் தோல்வி, செய்யும் தொழிலில் இடையூறு போன்ற சூழ்நிலையை சந்திக்கும் யோக நிலை உருவாகும்.

செவ்வாய் லக்னத்திற்கு 10ல் பலம் பெற்று இருந்தால்
செவ்வாய் வீரத்துக்குரியோன் நிலத்துக்குரியோன் கோபத்துக்குரியோன் ரோஷத்துக்குரியோன். இந்த கிரகம் 10ல் பலம் பெற்று இருந்தால் போலீஸ், ரவுடி, மிலிட்டரி, நிலம் வீடு மனைகள் வாங்கி விற்கும் தொழில், பாதுகாப்பு துறை, தீயணைக்கும் படையில் வேலை, வீரதீர சாகஸ வேலை, சிங்கம் புலி யானை போன்ற மிருகங்களை வைத்து சர்க்கஸ் செய்யும் வேலை, தீப்பெட்டி, பட்டாச தொழில், போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதிகமான லாபம் பெறக்கூடிய யோகம் அமையம். இந்த கிரகம் பலமாக இருந்தால்தான் மேற்கூறியபடி இருக்கும். நல்ல நிர்வாக திறமையம் இருக்கும். அதுவெ பலமிலந்து இருந்தால் சரியான பயந்தான் கொள்ளியாக தொடைநடுங்கியாக பகைவர்களின் தொல்லைக்கு ஆளாபவர்களாக, தொழிலில் நஷ்டத்தை ச்ந்திப்பவர்களாக யோக நிலையை தந்துவிடும்

லக்கினத்திற்கு பத்தில் புதன் கிரகம் பலம் பெற்று அமைந்தால்
ஸ்கூல் மற்றும் காலேஜ் ஆகியவற்றில் டீச்சர்களாக புரபசர்களாக வேலை,  கவிஞர்களாக, கணக்கர்களாக, எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, உபதேசம் செய்பர்களாக, ஆலோசனை கூறுபவர்களாக கணித துறை வங்கி தறை இன்சூரன்ஸ் துறை பத்திரிக்கை டிவி, செய்தி, சார்நத துறைகளில் ஈடுபட்டு நிறைய லாபம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். வலு குறைந்தால் சமயோசித புத்தியின்மை, மறதி, விவேகமின்மை சாதுரியமின்மை ஆகிய தொல்லைகள் உருவாகும்.

குரு கிரகம் லக்னத்துக்கு பத்தில் இருக்கக்கூடிய அமைப்பாக இருந்தால்

குரு நேர்மைக்க சொந்தக்காரர். நியாயமாக நடக்க வைப்பவர். ஒழுக்கமான வேலைகளை தருபவர். வலுவான குரு பல்கலை கழகத்தில் புரபசராகவும், மருத்துவராகவும் வரி, கல்விதுறை, அரசியல் துறை ஆலய துறை,ஆராய்ச்சி துறை, வர்த்தகத்துறை, சட்டம் ஒழுங்க துறை, வங்கி துறை,ஆகிய துறைகளில் உத்தியோகம் மற்றும் தொழில்களில் ஈடுபட்டு கை நிறைய சம்பாதிக்க கூடிய யோகம் அமையம். இந்த குருவே கெட்டுபோய் இருந்தால் பொய் லஞ்சம்  துரோகம் செய்தல் காட்டி கொடுத்தல், குழிபறித்தல் வீண பழி சொல். அதிகாரிகளின் கெடுபிடி அகிய சுபமற்ற பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும்.

சுக்கிரன் லக்கினத்திற்கு 10ல் இருந்துவிட்டால்.

இயல் இசை நாடகம் டிவி சினிமா சீரியல் நடிப்பு நாட்டியம் சங்கீதம் ஆடம்பரம் அழகு அணிகலன்கள் தங்கம் வைரம்  அழகு ஜவுளி கடைகள் பட்டு மால்கள் மாட மாளிகைகள் வாசனை துறைகள் குதிரை பந்தயம் மருந்து விற்பனை மால்கள், என ஈடுபட்டு கை நிறைய பணம் சம்பாதிக்கும் யோகம் அமையும். அப்படி கிரகம் வலுவற்று இருந்தால் விபச்சாரம், அடிமை தொழில், தீய பழக்கங்கள் பெண்பித்து நிலை என தீய யோகங்கள் கிடைக்கம் அல்லது சிலருக்கு பணம் இருந்தும் நல்ல சுகமாக சொகுசாக இல்லாமல் மிகவும் சாதரணமாக எந்த ஒரு சந்தோசத்தையும் அனுபவிக்காமல் இருக்கக்கூடிய யோகத்தை இந்த பலமற்ற சுக்கிரன் தரும்.


லக்னத்துக்கு 10ல் சனி இருந்துவிட்டால் அதவும் பலமாக இருந்துவிட்டால்

விவசாய துறை, மருத்துவ துறை இன்சூரன்ஸ், ஏஜென்ஸி, இரும்பு ஈயம், எண்ணெய் வியாபாரம், அரிசி மண்டிகள் பருப்பு பயறு புண்ணாக்கு மண்டிகள். தொழிற்சாலை அமைத்தல், பணணை தொழில் அமைத்தல், போன்றவற்றில் ஈடுபட்டு கை நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய நிலையை உருவாக்கும். இதுவே பலமற்ற சனியாக இருந்தால் அடிமை வேலை, அழுக்கு வேலை, திருட்டு வேலை, மாட்டு தொழுவத்தில் சாணி அள்ளும் வேலை, காவல் வேலை, தோட்ட வேலை, மரம் வெட்டும் வேலை கூட்டுறவு சங்கம் வேலை கூட்டுறவு பண்ணை வேலை போன்ற வேலைகளில் ஈடுபடும் யோகநிலை உருவாகும்.


லக்னத்திற்கு பத்தில் ராகு இருந்துவிட்டால்
விண்வெளி பயணம், ஆராய்ச்சி, வானொலி, சர்க்கஸ், தெய்வீக பணி மருத்துவ பணி கெமிக்கல் பணி மாந்திரீக பணி என பணிகளை தரும். ராகு எந்த கட்டத்தில் உள்ளதோ அந்த கிரகம் சார்ந்த பணிகளை செய்ய வைக்கும். பலமற்ற ராகு சந்தேக புத்தியையும் எதையும் நம்ப இயலாத தன்மையையும் உருவாக்கும். செய்யும் செயல்களில் ஏடாகூட நிலையை, மனக்குழப்பத்தை உருவாக்கும்.

10ல் கேது பலம் பெற்று இருக்குமானால்
தெய்வீகம் சம்பந்தப்பட்ட துறைகள் வெளிநாட்டு வர்த்தகம் ஏற்றுமதி இறக்குமதி,  விஞ்ஞானம் அறிவியல் சார்ந்த துறைகள் மெஸ்மரிசம் வசீகரம் கட்ட பஞ்சாயத்து ஆன்மீகம் சம்பந்தப்பட்ட துறைகள்
போன்றவற்றில் ஈடுபட்டு  கைநிறைய பணம் சம்பாதிக்கக் கூடிய யோகம் கிடைக்கும்.

சொந்தமாக தொழில் தொடங்கலாமா?, என்ன தொழில் செய்து லாபம் சம்பாதிப்பது? எப்படி லாபம் சம்பாதிக்கலாம் என்பது அவரவர் ஜாதகம் பார்த்தாலே தெரிந்துவிடும். முதல் போடும் தொழில், முதல் போடாமல் செய்யும் தொழில் / முதல் இல்லாமல் செய்யும் தொழில் என 2 இருப்பது பற்றி நமக்கு தெரியும். சொந்த தொழில் யோகம் உள்ளவர்கள் தான் முதல் போட்டு தொழில் செய்ய முடியும் . முதல் போட்டு தொழில் செய்தால் நஷ்டம்தான் வரும் என்ற யோக அமைப்பை பெற்றவர்கள் முதல் போடாமல் தொழில் செய்யும் அமைப்பில் இறங்க வேண்டும். உதாசணமாக கிழ்கண்ட தொழில்களை முதல் போடாமல் சம்பாதிக்கும் தொழில் என சொ்லலாம் கமிஷன் தொழில சொல்லலாம். இன்சூரன் ஏஜன்ட், டிக்கட் ஏஜன்ட் மற்றும் உத்தியோகம் போன்ற வெலைகளை சொல்லலாம்.


பத்தாம் அதிபதி நவாம்ச சக்கரத்தில் இருக்கும் பலன்

பத்துக்கு அதிபதி  நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ அதன்படிதான் தொழில் அமையும் யோகம் அமைகிறது.  பத்தாம்  அதிபதி நவாம்சத்தில் “நெருப்புக் கிரகம் செவ்வாய் அதிபதியாக இருக்கக்சகூடிய மேஷம், விருச்சிகம் ராசிகளில்” இருந்தால் நெருப்பு சம்பந்தமான தொழிலாக  செங்கல், செங்கல் சூளை, தங்கம், வெள்ளி உருக்கும் கடை, ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில், டீ, ஹோட்டல், பேக்கரி, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், சினிமாத்துறை போன்றவைகள் தொழில் செய்யும் யோகம் ஆக அமைவதுண்டு. துலாம் , ரிஷபம் வீடுகளுக்கு சுக்ரன்தான் அதிபதி.  நவாம்சத்தில் இந்த கட்டங்களில்  பத்தாம் அதிபதி அமையுமானால், அவர்களுக்கு பெண்கள் ஆடைகள், உள்ளாடைகள்,பேன்ஸி ஸ்டோர், அணிகலன்கள், வெள்ளி வியாபாரம், பெரிய ஷோரூம், டிவி சீரியல் தயாரித்தல், சினிமா தயாரித்தல், சூப்பர் மார்கெட்ஈ ஏஜன்சி / ஏஜென்ஸி ஆகியவற்றை செய்யம் தொழில் யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள். 10ம் இடம் பலம் பெற்று இருந்தும் , 10 ம் இடத்து அதிபதி நவாம்சத்தில் புதனுக்குரிய மிதுனம், கன்னி ராசிகளில் இருந்தால் தொழில் அதிபர் ஆக ஆகும் யோகம் சிலருக்கு வுர்ய்ப்பதுண்டு.  புதன் விவேகம் / சாதுரியம் / சாமார்த்தியம் / புத்திசாலிதனம் / சாணக்கியம் , பொறுமை ஆகியவற்றிற்கு காரணமாகிறார். நவாம்சத்தில் இதன் வீட்டில் தொழிலுக்குரிய கிரகம் இருந்தால் அவர் தொழிலில் வெற்றி பெற முடியும். இவர்கள் ஆரம்பிக்கும் தொழில் வெற்றி பெற ஆரம்பிக்கும். இவர்களின் நட்பை பெற்றவர்கள் இவர்களிடம் தொழிலில் வெற்றி பெற  ஆலோசனைகள் பலவற்றை  பெற முடியும். இவர்களால் தொழிலில் வெற்றி பெறுவது எப்படி / வியாபாரத்தை பெருக்குவது எப்படி என்று லெக்சரே கொடுக்க முடியும். தொழிலில் புதன் சம்பந்தப்பெற்றவர்களுக்குதான் தொழிலில் வெற்றி ரகசியம் பற்றி அறிந்தவர்களாக பெரும் தொழில் முனைவோர்களாக இருப்பார்கள்.
இத்தகையோர் மார்கெட்டிங், ஏஜென்ஸி / ஏஜென்ஜி, கமிஷன், காண்ட்ராக்ட் ஆகியவற்றில் பெரும் லாபம் தொழில் ஆக நடத்துவர். இவர்கள் நடத்தும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், பல்பொருள் அங்காடி, நாட்டு மருந்து கடை, புத்தகம் , பதிப்பகம், பிரிண்டிங் முதலிய தொழில்கள் லாபகரமான தொழில் ஆக இருக்கும்.

பத்தாம் அதிபதி நவாம்சத்தில் கடகம் ராசியில் இருக்குமானால் நீர் சம்பந்தப்பட்ட தொழில் லாபம் தரும் தொழில் ஆக இருக்கும். இதைத்தவிர பழக்கடை, காய்கறி கடை, பூ வியாபாரம் போற்றவற்றி்ல் வியாபாரம் பெருக ஆரம்பிக்கும். இதைத்தவிர  ஜாம், ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றிலும் வியாபாரம் பெருகும் நிலை உருவாகும். பாஸ்ட்புட், கெமிக்கல், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் போன்றவைகளும் இத்தகைய அமைப்பை பெற்றொர் செய்யும் தொழிலாக அமைவதும் உண்டு.

மேலே உள்ளவாறு இல்லாமல் பத்தாம் அதிபதி சூரியனுக்குரிய சிம்மத்தில் இருந்தால் அரசாங்க காண்ட்ராக்ட், மருத்துவம், பேக்கரி, கேண்டீன், ஹோட்டல் நகைக்கடை, ஜவுளிக் கடை மருத்துவத்தொழில் மற்றும் நெருப்பு சார்ந்த வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்க யோகம் உண்டு / நெருப்பு சார்ந்த தொழிலில் அமோக லாபம் கிடைக்க யோகம் உண்டு. பத்தாம் அதிபதி நவாம்சத்தில் மீனம் தனுசு ராசிகளில் இருந்தால் நவரத்ன நகைகள் வியாபாரம், தங்க நகைகள் வியாபாரம் , துணி கடை / ஜவுளி வியாபாரம் / டெக்ஸ்டைல் வியாபாரம், மளிகை கடை ரெடிமேட் கடை போன்ற லாபம் தரும் தொழில்களில ஈடுபடுவார்கள் /  லாபம் தரும் சுயதொழில்களை செய்வார்கள். கிரகங்கள் பலம் குறைந்து இருந்தால் லாபம் தரும் சிறு தொழில் மேற்கொள்ளும் நிலை ஏற்படும்.

பத்தாம் அதிபதி நவாம்சத்தில் சனி வீடாகிய மகரம் கும்பம் என்ற ராசிகளில் நவாம்சத்தில் இருக்குமேயானால் ஹார்டுவேர் மற்றும் இரும்பு கடை , கட்டுமான தொழில், எண்ணெய் வியாபாரம், அரிசி மண்டிகள், பருப்பு பயறு உணவு தணிய கிட்டங்கிகள் போன்றவற்றில் பெருமளவு சேமித்து விற்கும் மண்டிகள் வியாபாரம், பழைய புதிய வாண்டி வாகனம் விற்பனை தொழில், பத்திரிக்கை , புத்தகம் வெளியிடுதல், ஸ்கிரா்ப் விற்பனை போன்ற தொழில் களில் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு ராஜ யோகம் உண்டா / உங்களுக்கு ராஜயோகம் உண்டா என்று அறிய வேண்டுமானால் மேலே கூறப்பட்டுள்ள விசயங்களை கூர்ந்து கவனித்து கிரகங்களும் பலமாக உள்ளனவா என கண்டறிந்து உள்ள உண்மையான யோக நிலையை அறியலாம். வியாபாரம் தொழில் சரியில்லாதவர்கள் பயனுள்ள இணைய தளங்கள் ளை பார்த்து அதில் வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் எங்கே இருக்கிறது என்று தேடி அதை கண்டு பிடிக்கவும். அப்புறம் அந்த வியாபாரம் தொழில் பெருக மந்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி அப்புறம் நிறைய சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

7ம் இடம் நன்கு அமைந்திருந்து 10ம் இடத்துடன் நல்ல நிலையில் சம்பந்தம் அமையப்பெற்றவர்கள் கூட்டுத் தொழிலில் குதூகலம்  காணலாம்.

பூர்வ புண்ணிய யோகத்தை எவ்வாறு அறிவது எப்படி என்றால் ஜாதகத்தில் 5ம் கட்டம் என்று ஒன்று இருக்கும். இந்த ஐந்தாம் கட்ட அதிபதி கெட்டு போகாமல் இருந்தால் நன்கு பலம் பெற்று இருந்தால் நல்லவர்கள் சம்பந்தம் பெற்று இருந்தால் அப்படிப்பட்ட ஜாதகர்களைத்தான் நாம் பூர்வ ஜென்ம புண்ணிய யோகம் பெற்றவர்கள் என்று சொல்கிறோம். ஜாதக யோகங்கள் எப்படி இருக்கிறது? யாருக்கு யோகம்? இருக்கிறது? எதில் யோகம் இருக்கிறது எப்படி யோகம் இருக்கிறது?   என்று பார்க்க வேண்டுமானால் முதலில் இந்த பூர்வ புண்ணிய யோகம் பார்த்துவிட்டு அப்புறம்தான் வேறு கட்டங்களின் யோகம் பார்க்க வேண்டும். தொழில் என்பதும் வேலை என்பதும் சேவை என்பதும் ஒன்றுதான். அந்தப் பொதுவான வார்த்தைக்குரிய ஜோதிட வார்த்தைதான் ஜீவன ஸ்தானம்.

ஏற்றுமதி இறக்குமதி தொழில் யோகம்
ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில்
அபரிதமான வருமானம் பெற வேண்டுமானால் களத்திர ஸ்தானம் என்று சொல்லப்படுகிற 7மிடம் நன்கு வலிமை பெற்று அமைந்திருக்க வேண்டும். இந்த ஸ்தானம்தான் வெளிவட்டார தொடர்புகளையும், பொது மக்களையும், வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானங்களையும் மாற்ற இன மக்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தையம் குறிக்கும். 4ம் மிமும் 10மிடமும்  நன்கு இருந்தால் ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் அபரிதமான வருமானம் கிடைக்கக்கூடிய நல்ல யோகம் ஆக அது அமையும்...
http://job-jothidam.blogspot.com/2015/09/blog-post.html
வேலையா தொழிலா எது உங்களுக்கு வெற்றியை தரும்?


கூட்டுத் தொழில் யோகம் 

கோடீஸ்வர யோகம் உங்களுக்கு உண்டா? நீங்களும் கோடீஸ்வரர் ஆவதற்கான வழி.
   
கூட்டுத்தொழில் செய்யும் யோகம் யாருக்கு? ..

ஜாதகப்படி தொழில்

வெளிநாடு யோகம் உண்டா?
   
தொழில் யோகம்
   
ஜாதகப்படி தொழில் , வேலையை தேர்ந்தெடுப்பது எப்படி ?

ஜாதக யோகங்கள்
   
தொழிலில் கொடி கட்டி பறக்கும் நேரம்

தொழில் யோகம்- வியாபார யோகம்-அதிர்ஷ்ட யோகம்

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

ஒருவர் சுய ஜாதக ரீதியாக, ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெறவும்? பங்கு வர்த்தக தொழில் மூலம் நல்ல வருமானம் பெறவும், யோகம் தரும் பாவகங்கள் எது என்று சொல்ல இயலுமா ?